TNPL தொழிலாளி சாக்கடை கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு

TNPL தொழிலாளி சாக்கடை கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Update: 2024-05-01 11:01 GMT
TNPL தொழிலாளி சாக்கடை கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள புகலூரில் TNPL காகிதஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், அருகே உள்ள மேலப்பட்டி, பாரதி நகரை சேர்ந்தவர் தேவசேனாதிபதி வயது 59. என்பவர், காகிதாலை நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில், வேலைக்குச் சென்ற தேவசேனாதிபதி மறுநாள் வீடு திரும்பவில்லை. இதனால் தேவசேனாதிபதி மனைவி லட்சுமி தனது கணவனை தேடிச் சென்றபோது, சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலை கழிவுகள் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கால்வாயில், தேவசேனாதிபதி விழுந்து, மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டனர். மேலும், இது தொடர்பாக தேவசேனாதிபதி மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த தேவசேனாதிபதி உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News