சூரியஓளி மின்சாரம் வழங்க ரூ.1.80கோடி மதிப்பில் பணிகள் தொடக்கம்

சூரிய ஓளி மின்சாரம் வழங்க ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகளை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-20 12:58 GMT

பணிகள் ஆய்வு 

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண். 6-ல் செட்டிச்சாவடி பகுதியில் 5.50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய ஒளி மின் சக்தி ஆலை 2 அலகுகள் ரூ.23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை கோரிமேடு மின்சார பகிர்மான நிலையத்திற்கு சூரிய ஓளி மின்சாரம் வழங்குவதற்கு ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் மின்கடவு பணிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக சூரிய ஒளி மின்னாக்கி ஆலை செட்டிச்சாவடியில் 3 மெகாவாட் மற்றும் 2.50 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் ரூ.23கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மின்னாக்கி ஆலை 9163 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். இந்த மின் உற்பத்திக்கான மின்கடவு பணிகள் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கோரிமேடு துணைமின் நிலையத்திற்கு வழங்கப்படும்.

இதற்கான பணிகள் 4 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மின்சாரம் கோரிமேடு துணை மின்நிலையத்திற்கு வழங்குவதால் சேலம் மாநகராட்சிக்கு ஓராண்டிற்கு ரூ.4 கோடியே 30 லட்சம் மின்கட்டண சேமிப்பு ஏற்படும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

Tags:    

Similar News