பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு
தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி அலுவலகத்தில் இளைஞர்கள் மனு அளித்தனர்.;
Update: 2024-06-27 03:17 GMT
மனு அளிக்க வந்த இளைஞர்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் முனிஸ்வரன். இவர் சோழபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் தனது நண்பர்களுடன் மது பாட்டில்களை வாங்கியுள்ளார். மதுபான கடை அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது கட்டப்பையை சோதனை செய்தபோது 5 மது பாட்டில்கள் வைத்திருந்ததாகவும், மதுபாட்டிகள் விற்பனை செய்வதாகவும் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும் அந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்