புகையிலை பொருட்கள் கடத்தல் பெண் உள்பட 4 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் காவல்துறை சோதனையில் ஈடுபட்ட போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யதவர்களை கைது செய்தனர்.

Update: 2024-01-15 11:42 GMT
புகையிலை பொருட்கள் கடத்தல் பெண் உள்பட 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள் மற் றும் குட்கா போன்றவை கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் போலீசார் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர்.

வள்ளி என்பவர் கடை யில் சோதனை நடத் தியபோது அங்கு காரில் கடத்தி வரப்பட்டு விற்ப னைக்காக வைக்கப்பட்ட 110 புகையிலை பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு அவை காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக கரடிகுளம் ஓடை தெருவை சேர்ந்த திருமலைக்கனி மகன் காளிராஜ் (வயது 37), அரு ணாசலம் மகன் ஜெயக்கு மார் (28), சிவகிரி கோவிந்தன் கோவில் தெருவை சார்ந்த பழனிச்சாமி மகன் கலைச்செல்வன், கொத் தாடப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை மனைவி வள்ளி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

Tags:    

Similar News