தருமபுரி அருகே ஆலங்கட்டி மழை
சோலைக்கொட்டாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 14:13 GMT
தருமபுரியில் ஆலங்கட்டி மழை
தமிழகம் முழுவதும் தற்போது கோடை காலம் நடைபெறும் சூழலில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி தாண்டி பதிவு ஆகி வருகிறது இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களாக ஒரு சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் சாரல் மலையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் சோலை கொட்டாய் பகுதிகளில் இன்று இடி,மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.