தபால் ஓட்டு செலுத்த இன்று கடைசி நாள்

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் ஓட்டுகள் செலுத்த அவகாசம் இன்றுயுடன்(18 ம் தேதி) முடிவடைகிறது.

Update: 2024-04-18 03:53 GMT

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் ஓட்டுகள் செலுத்த அவகாசம் இன்றுயுடன்(18 ம் தேதி) முடிவடைகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் ஓட்டுகள் செலுத்த அவகாசம் இன்றுயுடன்(18 ம் தேதி) முடிவடைகிறது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் அமைத்துள்ள சேவை மையம் கடந்த 13 ம் தேதி முதல் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், போலீசார் தபால் ஓட்டினை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், தபால் ஓட்டு போடுவதற்கு நேற்று முன்தினம்(16 ம் தேதி) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வெளிமாவட்டத்தை சேர்ந்த அலுவலர்கள் பலருக்கு பேலட் ஷீட் வழங்கப்படாததால் தபால் ஓட்டு போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், தபால் ஓட்டுகள் போடுவதற்கு நேற்றும், இன்றும் என இரண்டு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பாக கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியிருப்பதாவது; இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் நேற்று(17 ம் தேதி) மற்றும் இன்று(18 ம் தேதி) தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தங்களது தபால் ஓட்டினை செலுத்தலாம் என்று அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News