கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இங்கு பதிவான மழை விபரம்...
Update: 2023-11-29 09:34 GMT
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 29ம் தேதி காலை நிலவரப்படி வடக்குத்து 54 மி.மீ., குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி 34 மி.மீ., புவனகிரி 32 மி.மீ., பரங்கிப்பேட்டை 31.7 மி.மீ., கொத்தவாச்சேரி 28 மி.மீ., மே. மாத்தூர் 26 மி.மீ., சிதம்பரம் 25.4 மி.மீ., லக்கூர் 23.2 மி.மீ., எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 22.5 மி.மீ., வேப்பூர் 22 மி.மீ., கடலூர் 19.4 மி.மீ., வானமாதேவி 18.2 மி.மீ., ஆட்சியர் அலுவலகம் 17.2 மி.மீ., காட்டுமன்னார்கோவில் 16.4 மி.மீ., லால்பேட்டை, காட்டுமைலூர் 15 மி.மீ., சேத்தியாத்தோப்பு 13. 6 மி.மீ., அண்ணாமலை நகர், விருத்தாசலம் 13 மி. மீ., குப்பநத்தம் 4.8 மி.மீ., பெலாந்துறை 1 மி. மீ., மழை பதிவாகியுள்ளது.