நாகை மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி !

நாகை மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி ரூ.50- க்கு விற்பனை ஆகிறது.

Update: 2024-07-06 07:10 GMT

தக்காளி

நாகை மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி ரூ.50- க்கு விற்பனை நாகை மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து ரூ.50-க்கு விற்பனையானது.இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். தக்காளி விலை உயர்வு தக்காளி பாதிப்பால்,விளைச்சல் கடந்த சில வாரங்களாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. திருமருகல் ஒன்றியத்தில் மொத்த கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. சில்லறை கடைகளில் ரூ.150 வரை விற்கப்பட்டது.ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் தக்காளி விலை உயர்வு காரணமாக ஒரு கால கட்டத்தில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறியது. கடந்த சில வாரங்களாக இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் இன்று எப்படியாவது சமைத்துவிட வேண்டும் என உறுதிமொழி ஏற்று சமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.தக்காளி விலை எப்போதுதான் குறையும்? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை சரசாரியாக நாள் ஒன்றுக்கு ரூ.20 வீதம் குறைந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமருகல் பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10, ரூ.20 என தொடர்ச்சியாக குறைந்து வந்தது. இதனால் நேற்று தக்காளி விலை ரூ.50-க்கு விற்பனையானது. அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து ஓரளவுக்கு அதிகரித்து இருப்பதால், அதன் விலை குறைந்து வருவதாகவும், இனி வரக்கூடிய நாட்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News