வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து ஒரு பெட்டி ரூ.800க்கு விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான மோர்பட்டி, வடமதுரை, தீத்தாகிழவனூர், நடுப்பட்டி கல்பட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளிகள் இங்கு கொண்டு வரப்படுகிறது.இதனால் கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூபாய் 250 க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூபாய் 800 வரை விற்பனையானது.
தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையலுக்கு மிகவும் முக்கியமானது தக்காளி என்பதால் வேறு வழியின்றி ஒரு கிலோ ரூபாய் 50 க்கு வாங்கி செல்கின்றனர். தற்போது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தக்காளி வரத்து பெரும் அளவு குறைந்துள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஞாயிற்றுக்கிழமை சந்தை இன்று வெறுச்சோடி காணப்பட்டது. குறைந்த அளவே விவசாயிகள் வியாபாரிகள் வந்திருந்தனர்.