2021 தேர்தலில் முதல் மூன்று இடங்களை பிடித்த வேட்பாளர்கள் பாஜவில் இணைவு
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 2021 தேர்தலில் முதல் மூன்று இடங்களை பிடித்த வேட்பாளர்கள் தற்போது பாஜவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டர். அ.தி.மு.க, பா.ஜ. கூட்டணியில் பாஜ சார்பில் ஜெயசீலன் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேரி ஆட்லின் போட்டியிட் டார். இவர்கள் மூவரும் பிர தான கட்சி வேட்பாளர்களாக அறியப்பட்டனர்.
அந்த தேர்த லில் விஜயதரணி 87,473 வாக்கு களை பெற்று வெற்றிபெற்றார். பாஜ வேட்பாளர் ஜெயசீலன் 58,804 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேரி ஆட்லின் 12,292 வாக்கு கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.இதில் மேரி ஆட்லினுக்கும் நம் தமிழர் கட்சி நிர்வாகி களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பாஜவில் இணைந்தார். விளவங்கோட் டில் வெற்றிபெற்ற விஜயதரணி பாஜவில் இணைந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால்தான் விளவங்கோட் டில் இடைத்தேர்தலே நடக்கிறது.
ஜெயசீலன் தொடர்ந்து பாஜவில்தான் உள்ளார். எனவே விளவங்கோடு தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த வேட்பாளர்கள் மூவரும் இப்போது பாஜவில் உள்ளனர். இதில் ஜெயசீலனும், மேரி ஆட்லி மேரி ஆட்லின்னும் ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் பாஜ வேட்பாளர் நந்தினிக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வரும் நாட்களில் விஜயதரணியும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள் ளார். கடந்த தேர்தலில் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் பாஜ வில் இருப்பதுடன், பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது ஆச்சரியமான சம்பவம்தான்.