சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம் பெற இணையதளத்தில் பதியலாம்

சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம் பெற இணையதளத்தில் பதியலாம் - ஆட்சியர் உமா தகவல்

Update: 2023-12-22 16:30 GMT

சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம் பெற இணையதளத்தில் பதியலாம் - ஆட்சியர் உமா தகவல்

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கோண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாப்பயண வழிகாட்டிகள்/ பயண முகவர்கள் / சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர்கள் ஆகியோர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் சுற்றுலாத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவு போர்ட்டலின் நகலினை (https://www.tntourismtors.com) இணையதளம் மூலம் பெறலாம். தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆகவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்கள் பதிவு செய்வதற்கான இணையதளம் மற்றும் தொடர்பு அலுவலகம் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலர், நாமக்கல் அவர்களின் அலுவலக தொலைபேசி எண் 04286-280870 அல்லது namakkaltourism@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News