ஆண்டிபாளையம் பகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-12-05 09:37 GMT

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் சுற்றுலாத் துறை அதிகாரி  ஆய்வு. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளமாக பெரிதாக எதுவும் இல்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கினை ஏற்று திருப்பூர் மக்களின் நன்மை கருதி திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிப்பாளையம் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக  படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ்(சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஆண்டிபாளையம் பகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் ஆய்வு செய்தார்.  இது குறித்து அரவிந்த்குமார் கூறியதாவது சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி திட்ட பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகிறது.

இன்னும் 3 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவுற்று, திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் அமையும்.  என்றார்.  ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பூபதி, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News