கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
இன்று விடுமுறை நாள் என்பதால், கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் இதமான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது, இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகமட்டுமின்றி கேரளா,ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது,
குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதலே மிதமான வெப்பத்துடனும், பனி மூட்டத்துடனும் கூடிய குளுமையான கால நிலை நிலவி வருகின்றது ,இந்த இதமான குளுமையான கால நிலையை அனுபவித்தவாறு மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை,பிரையண்ட் பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்,மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும்,ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர், சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலாதொழில்புரிவோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.