திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2024-01-15 05:38 GMT
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள்

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து உள்ளது.

இதனால், மக்கள் அருவிகளுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மேலும், அருகில் உள்ள சிறுவர் பூங்காவிலும் சிறுவர்கள் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்த வண்ணம் உள்ளதால் திற்பரப்பு அருவி பகுதி களை கட்டியுள்ளது. இதனால், உள்ளுர் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News