திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இந்த அருவியல் வறட்சியான கோடை காலம் ஆனாலும் குழுமையான தண்ணீர் விழுந்து கொண்டே இருப்பது சிறப்பு ஆகும். இதனால் இந்த அருவியை குமரியின் குற்றாலம் என்று பலராலும் போற்றப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் பலரும் பஸ்களில் திர்ப்பரப்பு அருவிக்கு வந்து செல்வது வழக்கம். உள்ளூர் மக்களும் வார விடுமுறை என்றால் திற்பரப்பு அருவியில் குளியல் போடுவதற்கு பல இடங்களில் இருந்து வருவார்கள்.
கோடை காலம் வந்து விட்டால் அருவியில் குடும்பத்துடன் வந்து குவிவது வழக்கம். இங்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் வசதியாக அருவியில் தனித்தனியாக குளிக்கும் இட வசதிகள் உள்ளது. அருவியின் மேல் பகுதியில் கோதை ஆற்றின் குறுக்கு தடுப்பணை கட்டப்பட்டு உல்லாச படகு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மக்கள் நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதே போன்று திற்பரப்பு அருயிலும் தினந்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிந்தனர். அருவியில் உற்சாகமாக குளியல் போட்டதோடு மேல் தடாகத்தில் உள்ள தடுப்பனையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை ரசித்தனர்