கீழடியில் குவிந்து வரும் பார்வையாளர்கள்
தொடர் விடுமுறைகளை முன்னிட்டு கீழடியில் குவிந்து வரும் பார்வையாளர்கள் கூட்டம்
Update: 2024-01-01 01:23 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 9 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது. இதில் மண் பானைகள், சூது பவளம், இரும்பு ஆயுதங்கள், விலங்கு எலும்புகள், தாயகட்டைகள் உள்ளிட்டவை கிடைத்தன. இந்நிலையில் அகழாய்வு பணிகளை பார்வையிட அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் கீழடியில் குவிந்து வருகின்றனர்