அருவியில் அவதி அடையும் சுற்றுலா பயணிகள்
களக்காடு சுற்றுலா தளத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்;
Update: 2024-01-01 04:18 GMT
அருவியில் அவதி அடையும் சுற்றுலா பயணிகள்
நெல்லை மாவட்டம் களக்காட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவின் மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.குறிப்பாக சுற்றுலா பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க பொருள்கள் வைப்பறை இல்லை. இதனால் குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்களிடமிருந்து உடைமைகளை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, வனத்துறை சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.