பறவைகள் சரணாலயத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ,பர்மா, இந்தோனேஷியா, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தியினரை, வர்ணனாரை, பாம்பு தாரா, நாமக்கோழி, உள்ளிட்ட பதினைந்து வகையான பறவைகள் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம்..
இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை அதிக அளவில் பெய்ததால் வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.. இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 5000-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தந்துள்ளது.
இந்த சூழலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இன்று சென்னை,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கையுடன் கூடிய பறவைகளை குடும்பத்துடன் ரசித்து வருகின்றனர்.