கரூர் அருகே டிராக்டர் - பைக் மோதல்

கரூர் அருகே முன் சென்ற டிராக்டர் பிரேக் போட்டதால், பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளனது.

Update: 2024-01-06 11:09 GMT

காவல் நிலையம் 

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியபட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் வயது 43. இவர் தனக்கு சொந்தமான டூவீலரில் மதுரை- சேலம் சாலையில், ஜனவரி 4ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், சென்று கொண்டு இருந்தார்.

இவரது டூவீலர் செம்மடை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, இவருக்கு முன்னாள் சென்ற டிராக்டரை ஓட்டிச் சென்ற,கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழைய ஜெயங்கொண்டம், தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் என்பவர், திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் டிராக்டருக்கு பிரேக் இட்டதால், இவரது வாகனத்திற்கு பின்னால் டூவீலரில் வந்த ராமகிருஷ்ணன் வாகனம், டிராக்டரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ராமகிருஷ்ணனுக்கு, தலை,முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமேற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ராமகிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள், இது குறித்து வாங்கல் காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், ஏற்பட்ட விபத்து காரணமாக முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News