மேட்டூர் மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மேட்டூர் மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கபட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 14:59 GMT
மலைப்பாதையில் சாய்ந்த மரம்
மேட்டூர் அணையை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டும்பொழுது, கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்வதற்காக சீத்தா மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்ட பின்பு அச் சாலை போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது சாலையின் இருபுறமும் மலைகள் அமைந்துள்ளதால் ஏராளமான மரங்கள் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர், சேலம் கேம்ப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. அப்போது சீதா மலை பாதையில் கருவேல மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் மேட்டூருக்கு வரும் வாகனங்கள் தொட்டில் பட்டி வழியாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.