கோவையில் குழியில் சிக்கி கொண்ட லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் குழியில் சிக்கி கொண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-06-10 13:21 GMT

லாரியை மீட்கும் பணியில் போலீசார்

கோவை நீதிமன்றம் வளாகம் அருகே லாரியின் சக்கரங்கள் சாலை நடுவே மண்ணில் புதைந்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி நடைபெற்றதாகவும் பின்னர் சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இன்று நண்பகல் அவ்வழியாக வந்த லாரி ஒன்றின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து சாலையின் நடுவே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் லாரியை மீட்கும் பணிகளை மேற்கொண்டதுடன் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

பின்னர் குழி ஏற்பட்டு இருந்த இடத்தில் கலவையிட்டு லாரியை மீட்டனர்.

Tags:    

Similar News