ரயில்வே கேட் வயர் அறுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஆனங்கூர் ரயில்வே கேட் இருப்புப்பாதை வயர் அறுந்ததின் காரணமாக 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2024-01-31 10:07 GMT

குமாரபாளையம் அடுத்துள்ள ஆனங்கூர் பகுதியில் கோவை, ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையிலான ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. ரயில்வே இருப்பு பாதையினை ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர், இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். தற்பொழுது ஈரோட்டிலிருந்து, பள்ளிபாளையம் வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சாலை பணிகள் நடந்து வருவதால், தற்போது ஆனங்கூர் ரயில்வே கேட் பாதையே பிரதான சாலையாக அமைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ரயில்வே இருப்பு பாதையில், ரயில் சென்ற பொழுது ரயில்வே கேட்டை அடைத்தனர். பின்னர் கேட்டை அதன், கேட் கீப்பர் திறக்க முயன்ற பொழுது கேட்டினை இணைத்து இருக்கும் ஒயர் அறுந்ததால் கேட் திறக்க இயலவில்லை. இதன் காரணமாக  வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அனைவரும் சேலம் மாவட்டம் சங்ககிரி சென்று மீண்டும் திருச்செங்கோடு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு நேரமும் எரிபொருள் விரயமும் ஏற்பட்டது.    இதனை அடுத்து தகவல் அறிந்து சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்கள், விரைந்து வந்து  ரயில்வே கேட்டை வயர்களை  சீரமைத்தனர். இதன் காரணமாக சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News