பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைவு

பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறைந்துள்ளது.

Update: 2024-02-17 09:23 GMT

மேம்பாலங்கள் 

சென்னை மாநகரின் நுழைவாயிலான பெருங்களத்துார் என்றாலே, போக்குவரத்து நெரிசல் தான் நினைவுக்கு வரும். அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால், நெரிசல் என்பது நிரந்தரமாக மாறியது. இதையடுத்து, பெருங்களத்துாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கடந்த 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலங்கள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. இந்த திட்டத்தில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கம்; பெருங்களத்துார் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராசிங் மேம்பாலம்; பெருங்களத்துாரில் இருந்து வண்டலுார் மற்றும் நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. கொரோனா தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால், கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 2022 செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த கட்டமாக, பெருங்களத்துாரில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை, கடந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறைந்துள்ளது.
Tags:    

Similar News