திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பல்லடம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-06-03 12:10 GMT

இந்தியா முழுவதும் 18 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.  வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு கல்லூரியில் எண்ணப்பட உள்ளது.  வாக்கு என்னும் நாளில் பல்லடம் சாலையில் கல்லூரி முன்பாக அதிகமான கட்சியினர் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அந்த அறிக்கையில் , பல்லடத்தில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி காவல்நிலையம் வழியாக பழவஞ்சிபாளையம் , சந்திராபுரம்,உஷா தியேட்டர்  வழியாக பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். திருப்பூர் பழைய பேருந்திலிருந்து பல்லடம் நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் தெற்கு காவல் நிலையம் வழியாக தாராபுரம் சாலை சந்திராபுரம் , பழவஞ்சிபாளையம் , வீரபாண்டி காவல்நிலையம் வழியாக வீரபாண்டி பிரிவு சென்று பல்லடம் செல்ல வேண்டும்.

வித்யாலயத்தில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி காவல்நிலையம் வழியாக பழவஞ்சிபாளையம் , சந்திராபுரம் , உஷா தியேட்டர் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி செல்லும் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சந்தைப்பேட்டை வழியாக-MGR மன்றம் முத்தையன் கோவில் சென்று தமிழ்நாடு தியேட்டர் முன்பாக பல்லடம் மார்க்கம் செல்ல வேண்டும்.பல்லடத்தில் இருந்து வரும் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தமிழ்நாடு தியேட்டரில் இருந்து முத்தையன் கோவில் வழியாக MGR மன்றம் சந்தைப்பேட்டை வழியாக திருப்பூர் நோக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றமானது நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் ,  வித்யாலயம் , வீரபாண்டி உள்ளிட்ட பகுதியில் சாலை தடுப்புகளுக்கான டிவைடர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News