ஆத்தூர் : சாலைப்போடும் பணியால் போக்குவரத்து பாதிப்பு !
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் பழுதான தார் சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டபோது அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 07:42 GMT
போக்குவரத்து பாதிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை செல்லும் பகுதியில் தார் சாலை பழுதாகி உள்ள நிலையில் அவ்வழியாகச் செல்லும் கனரக இளரக வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது அச்சாலையை சீரமைக்கப் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அவளியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது போன்ற சீரமைக்கும் பணிகளை இரவு நேரங்களில் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.