வழுக்கு மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது நடந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 79 அடி கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-01 10:56 GMT
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த ஆண்டு இந்த கோவில் திருவிழாவானது கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாமிசாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்பு வழுக்கும் பொருட்களான எண்ணெய் வகைகள், சோற்றுக்கற்றாழை போன்ற வழுக்கும் பொருட்கள் தடவப்பட்டு கழுகுமரம் முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் ஊர் பொதுமக்களால் ஊன்றப்பட்டது.இந்நிலையில் வழுக்கு மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலியானதால் திருவிழாவே சோகக் கடலானது. விழாவை முன்னிட்டு நேற்று வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெற்ற போது பொத்தகணவாய் பட்டியைச் சேர்ந்த பிச்சை அம்பலம் மகன் சுப்பிரமணி (30) மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது . இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags:    

Similar News