ஊத்தங்கரை அருகே பரிதாபம் - ஏரியில் மீன் பிடித்த முதியவர் நீரில் மூழ்கி பலி
ஊத்தங்கரை அருகே பரிதாபம் ஏரியில் மீன் பிடித்த முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
Update: 2024-02-21 05:20 GMT
முதியவர் நீரில் மூழ்கி பலி
ஊத்தங்கரை அருகே பரிதாபம் ஏரியில் மீன் பிடித்த முதியவர் நீரில் மூழ்கி பலி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி அருகே உள்ள புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாது வயது 60 , கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கெரிகேப்பள்ளி ஏரியில் மீன் பிடிக்க வலை வீசும் போது மீன்வலை அவரின் காலில் மாட்டிக் கொண்டது. நீரில் மூழ்கிய மாது பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.