விருதுநகர் அருகே சோகம் : ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை

விருதுநகர் அருகே அறிவுரை கூறியதால் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-01-04 14:41 GMT

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் , கலையரசி(39)தம்பதி. இவர்களது மகன் மருதுகணேஷ்(14) வத்திராயிருப்பு தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

தாய் கலையரசி மகன் அதிகமாக செல் போன் பார்த்து வந்ததாகவும் அதனால் கண் கெட்டுவிடும் என அறிவுரைகள் கூறியதாகவும் , அதனால் தாய் கலையரசி மீது மருதுகணேஷ் கோபமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று காலையில் மருதுகணேஷ் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில்,தாயும் பணிக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டிற்கு வந்து தாய் கலையரசி வீட்டினை திறந்த போது மகன் மருதுகணேஷ் வீட்டிற்குள் உள்ள பெட்ரூமில் போடப்பட்டுள்ள பேனில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் மருதுகணேஷ்யை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்வர்கள் தெரிவித்துள்ளனர் .இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News