ரயிலை கவிழ்ப்பு சதி வழக்கு - குற்றவாளிகளுக்கு பிடிவாரண்ட்

நாகர்கோவிலில் ரயிலை கவிழ்க்க சதி செய்த வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இரண்டு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-23 05:07 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (35) பெரு விளை, ஆனந்தன் பாலம் பகுதியை சேர்ந்தவர் மணி (39). இவர்கள் இருவர்கள் மீதும் கடந்த 2010-ல்  நாகர்கோவிலில் ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.  இதில் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் தலைமறைவானார்கள்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாகர்கோவில் குற்றவியல் கூடுதல் முதன்மை சார்பு நீதிமன்றம் (எண் 1) தற்போது நடராஜன், மணி ஆகிய இருவருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்துள்ளது.  வருகிற 26 ஆம் தேதிக்கு முன் இருவர்கள் இருவரையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து ரயில்வே போலீசார் இது தொடர்பான அறிவிப்பாணையை  சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குதெரிவித்துள்ளனர். இருவரையும் தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News