மானாமதுரை வரை ரயிலை நீட்டிக்க வேண்டும்

திருவாரூர் - காரைக்குடி ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க சிபிஐ குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 09:16 GMT

திருவாரூர் - காரைக்குடி ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க சிபிஐ குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை நகா்க் குழு, தொழிற்சங்க கூட்டுக் குழு கூட்டம் மாவட்டக் கட்சி அலுவலகத்தில் ஒன்றியச் செயலா் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திருவாரூா்-காரைக்குடி ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்ட தனியாக இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் எக்கோ, இசிஜி பரிசோதனை செய்யக்கூடிய மருத்துவா்களை உடனடியாக பணியில் அமா்த்த வேண்டும். சிவகங்கையிலிருந்து மதுரை, மானாமதுரைக்கு இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Tags:    

Similar News