ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு  விழா

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா நாகர்கோவிலில் நடைப்பெற்றது.

Update: 2024-05-04 06:38 GMT
ஊர்காவல் படை பயிற்சி நிறைவு

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 23 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 26.02.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (04.05.2024) நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சியானது அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு நாளான இன்று (04.05.2024) காலை கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து அணிவகுப்பு ஜென்சி சுகிர்தா என்பவர் தலைமையில் 23 படை வீரர்கள் கொண்ட ஊர்க்காவல் படையினர் மிகச் சீரிய முறையில் அணிவகுத்து சென்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தி நிறைவு செய்தனர்.

இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஊர்க்காவல் படையினராகிய உங்கள் அனைவரின் பங்களிப்பும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபடும் போது மிகவும் கண்ணியமாக செயல்பட வேண்டும் எனவும் அணிவகுப்பு மரியாதை மிக சிறப்பான முறையில் இருந்தது எனவும் கூறி ஊர்க்காவல் படையினரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். இப்பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, மாவட்ட குற்றபிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்கள், வட்டார தளபதி டாக்டர் பிளாட்பின், துணை வட்டார தளபதி மைதிலி சுந்தரம் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News