தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு !!

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது.

Update: 2024-04-09 10:57 GMT

ஆட்சித்தலைவர் ஜெயசீலன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் நீலம் நம்தேவ் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1895 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 145 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 145 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 202- இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 15 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203- திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 19 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 28 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 38 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 145 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.

குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.

Tags:    

Similar News