மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்!
பாராளுமன்ற தேர்தல்-மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிகள் கோவை காந்திபுரம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 10:38 GMT
மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
கோவை: பாராளுமன்ற தேர்தல் 2024 தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 288 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கோவை காந்திபுரம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறைகளை வாக்குச் சாவடிகளில் சிறப்பாகப் பணிபுரியும் வகையில் முதன்மை வாக்குப் பதிவு( Presiding Officers) அலுவலர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சி கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.இப்பயிற்சி வகுப்பினை சுரேஷ் தனித் துணை ஆட்சியர்( சமூகப் பாதுகாப்பு திட்டம்), கோயம்புத்தூர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் ஆகியோரால் வழங்கப்பட்டது.