மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் பயிற்சி

புளியங்குடி அருகே இருமன்குளம் அரசு பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2024-03-21 05:09 GMT

அறிவியல் செய்முறை பயிற்சி 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள இருமன்குளம் அரசு பள்ளியில் நேற்று மதியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை சங்கரன்கோவில் வட்டார வானவில் மன்ற கருத்தாளர் ராஜேந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் தங்களை நேரடியா சோதனைகளை செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News