தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி : ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சவாடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி எச்.தொட்டம்பட்டியில் நடந்தது.

Update: 2024-03-26 03:43 GMT

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ள நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளனர் அதன்படி பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சவாடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. வட்டார அளவில் நடைபெறும் முதல் கட்ட பயிற்சி எச்.தொட்டம்பட்டியில் நடந்தது.

இந்த பயிற்சி காலை, மாலை என நடந்தது. மண்டல தேர்தல் அலுவலர்களும், துணை மண்டல தேர்தல் அலுவலர்களும் பயிற்சி அளித்தனர். மேலும் தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியரமான சாந்தி நேரில் சென்று பயிற்சியினை ஆய்வு செய்தார். இதில் உடன் உதவி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான வில்சன் ராஜ சேகர், தாசில்தார் ராதாகிருஷ்ணன், பொன்னுசாமி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டனர். அரூர் வட்டார அளவிலான முதல் கட்ட பயிற்சியில் 440 பேர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News