ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.;
Update: 2024-05-28 07:31 GMT
பயிற்சி வகுப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டர், தேர்தல் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், வரும் ஜூன் 4ம் தேதி காலை 6:00 மணிக்கு, மையத்திற்கு வருதல் உள்ளிட்ட ஓட்டு எண்ணும் நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.