மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் பயிற்சி!
தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
Update: 2024-04-11 01:50 GMT
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களுக்கு B.E.L நிறுவனத்தினர் மூலம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கைள இயக்குதல் குறித்த பயிற்சி தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.