ரசாயன உரங்களின் பயன்பாடு குறித்து பயிற்சி
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாடு குறித்து பயிற்சி நடைபெற்றது.;
Update: 2024-06-28 16:21 GMT
பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த மோசவாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாடு குறித்து பயிற்சி நடைபெற்றது.
இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வ வெங்கடேஷ் ,வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜன்,வேளாண்மை அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுனர் நாராயணன் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரகாஷ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.