டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி
கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2024 இடங்களில் கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.
இதில் கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களுக்கு வானியல் குறித்தும் டெலஸ்கோப் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விஸ்வகர்மா மகாஜன சங்க செயலாளர் காளியப்பன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை கார்த்தீஸ்வரி முன்னிலை வகித்தார்.அறிவியல் ஆசிரியை லதா அனைவரையும் வரவேற்றார்.கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் வானியல் குறித்தும் டெலஸ்கோப் குறித்தும் பயிற்சி அளித்தார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் வசந்தகுமார் நன்றி கூறினார்.