கரூர் அறிவாலயத்தில் பயிற்சி பாசறை கூட்டம்

கரூர் திமுக தொழில்நுட்ப அணியினருக்கு அறிவாலயத்தில் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-14 12:18 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகமான, அறிவாலயத்தில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் பல்வேறு அணிகள் உள்ளது.

அதில் பிரதானமானது தொழில் நுட்ப அணியாகும். கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தொழில்நுட்ப அணியின் மூலம் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கட்சி எடுக்கும் நடவடிக்கைகள், முடிவுகள் உடனடியாக அந்த கட்சியினருக்கு போய் சேரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொழில்நுட்ப அணியின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

Advertisement

இதற்காக ஆளும் கட்சியாக உள்ள திமுக, தமது தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதற்காகவும், தொழில்நுட்ப அணியின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவிலான தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த பாசறை கூட்டத்தில் சென்னையிலிருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொழில்நுட்ப அணியினருக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News