திருச்சி மாநகரில் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம்
திருச்சி மாநகரில் பணியாற்றும் 4 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 16:59 GMT
கோப்பு படம்
திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் பணியாற்றிய சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் எஸ்.சிவராமன், காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவுக்கும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.விஜயலெட்சுமி அரியமங்கலம் காவல் நிலையத்திற்கும்,
அரியமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்.வினோதினி மாநகர குற்றப் பிரிவுக்கும், மாநகர குற்ற பிரிவில் பணியாற்றிய பெரியசாமி கோட்டை காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.