சாலை விபத்தில் திருநங்கைகள் பலி

Update: 2023-12-10 02:59 GMT

விபத்தில் உயிரிழந்த திருநங்கை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள் தனியா 25, தமிழ்  29., ஆகிய இருவரும் தங்களது டூவீலரில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற டிப்பர் லாரியை பூதலூர் அயோத்திபட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருநங்கைகள் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே டிப்பர் லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது , நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தன்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு திருநங்கையான தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விபத்து குறித்து வந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மணிமாறன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News