மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

பெரம்பலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை காவல்துறை கைது செய்தனர்.;

Update: 2024-01-12 05:40 GMT

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு முழுவதும் அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி ஒன்பதாம் தேதி நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, இன்றும் போக்குவரத்தில் எந்த பிரச்சனையும் இன்றி சீராக இயங்கிவரும் நிலையில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பலர் புதிய பேருந்து நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் தமிழக அரசை கண்டித்தும், போக்குவரத்து துறையின் உள்ள சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து திடீரென புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து வெளியே வந்த பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் சுமார் 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags:    

Similar News