ரயில் படிக்கட்டில் பயணம் - தவறி விழுந்த வட மாநில வாலிபர் பலி
வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த வட மாநில வாலிபர் தவறி விழந்து உயிரிழந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-18 08:31 GMT
உயிரிழந்த ரவீந்திர ராம்
பிகார் மாநிலம் சஞ்சத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ராம். இவரது மகன் ரவீந்திர ராம் (வயது 34) இவர் நேற்று காலை 10 மணி அளவில் கர்நாடக மாநில பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிகார் மாநிலம் செல்ல ஏதோ ஒரு ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர் வாணியம்பாடி விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தவறி விழந்து அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.