தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி சார்பாக மரம் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரம் நடும் விழா நடந்தது.

Update: 2024-06-07 09:00 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரம் நடும் விழா நடந்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் "பசுமை தஞ்சாவூர் - 2024" சவால் என்ற முன்னேடுப்பில் மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.  இவ்விழாவில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நட்டு விழாவைத் துவக்கி வைத்தார்.

  மருதுபாண்டியர் கல்லூரியின் முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில், மருதுபாண்டியர் கல்லூரியை சார்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக மேலாளர் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து சுமார் 250 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் அமைத்து மற்றும் அதனை பராமரிப்பதற்க்காக சொட்டு நீர் பாசன வசதி செய்தனர்.  முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ந.சந்தோஷ்குமார்  வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணி திட்ட அலகு- 2 திட்ட அலுவலர் டி.பூங்குயில் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் ரா.கண்ணன்  செய்திருந்தார்.

Tags:    

Similar News