உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா

மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.

Update: 2024-06-05 14:01 GMT

மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் திருவிழா நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சணமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் விருச்சக சோலையில் உருவாக்கப்பட்ட 52 வகையான நாட்டு மர வகைகள் மற்றும் பழமர வகைகள் என ஒரு கோடி மரக்கன்றுகளை ஜூன் 5 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் பல்வேறு கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பி வைத்தனர்.பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் அந்தந்த ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,லால்குடி வருவாய் கோட்டாச்சியர் சிவசுப்ரமணியன், மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் சணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சீனிவாசபெருமாள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News