உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் படத்திற்கு மரியாதை

உசிலம்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராஜின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2024-01-07 11:57 GMT

மரியாதை செய்த அதிமுகவினர் 

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்த துரைராஜ்.. 200 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சேடபட்டி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாகவும், 200- முதல் 2006 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளாட்சித்து அமைச்சராக இருந்தார். 2011 ஆம் ஆண்டுக்கு பின் சேடபட்டி தொகுதி பிரிக்கப்பட்டு உசிலம்பட்டி தொகுதியுடன் சேர்க்கப்பட்ட நிலையில் அதிமுகவின் மாவட்ட அவைத் தலைவராக இருந்தவர் கடந்த ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.

Advertisement

இவர் அமைச்சராக இருந்த போது வைகை அணையிலிருந்து சேடபட்டி வரை அமைக்கப்பட்ட சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி மற்றும் அதலை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இன்றும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் துரைராஜின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முன்ன அமைச்சர் உதயக்குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்கள் தொடர்ந்து ஒபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் துரைராஜின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News