உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி
அரியலூர் மாவட்ட தேமுதிகவினர் சார்ப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
Update: 2023-12-28 09:35 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று உயிர் இழந்தார். இச்சம்பவம் அக்கட்சியினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினர், சினிமா துறையினர், பொதுமக்கள் என அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில், அக்கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் அரியலூரில் பல்வேறு பகுதிகளில் ஏற்றப்பட்டிருந்த அக்கட்சி கொடியினை அரை கம்பத்தில் பறக்கவிட்டு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.