ராசிபுரத்தில் விஜயகாந்த்க்கு அஞ்சலி

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் நண்பர்கள் குழு சார்பாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2023-12-29 14:20 GMT

அஞ்சலி செலுத்திய வாலிபர்கள்

கேப்டன்' என அன்போடு அழைக்கப்பட்டவரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில், பழைய பஸ் நிலையம் நண்பர்கள் குழு சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement

இந்நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், வணிகர்கள், இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ரசிகர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் விடுதலைக்களம் தலைவர் கொ.நாகராஜன், மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் ஏடிசி சக்திவேல், மணிகண்டன், செல்வராஜ், மணிவண்ணன், யோகராஜன், எல். தரணிபாபு, பாலகிருஷ்ணன், கௌரி சங்கர், முகேஷ், கிருஷ்ணன், கார்த்தி, சங்கர், பொள்ளாச்சி சங்கர், மனோஜ்குமார், ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பாஸ்கர், மோகன், விக்னேஸ்வரன், கமால், கந்தசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News