நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு மரியாதை - நடிகர் சதீஷ் பேட்டி.

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு மரியாதை செய்வது நடிகர் சங்கத்தில் பெருமை என திருப்பூரில் நடிகர் சதீஷ் பேட்டி.

Update: 2024-01-01 12:21 GMT

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செய்வது என்பது நடிகர் சங்கத்திற்கு பெருமை என திருப்பூரில் காஞ்சரிங் கண்ணப்பன் 25வது நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சதீஷ் பேட்டி. நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளியான காங்சரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து  மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் எனவும் அந்த வகையில் காங்சரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்த அவர் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை எனவும், நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்த் என்றார். இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கடந்த டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான திரையரங்குகளை பொருளாதாரத்தில் காப்பாற்றியது நடிகர் சதீஷ் நடித்து வெளியான காங்சரிங் கண்ணப்பன் திரைப்படம் தான் எனவும்,  இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News